'கர' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய கர படம் நாளை வெளியாக உள்ளது.
'கர' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
Published on

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.

படத்திற்கான படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தன. இந்த நிலையில், கர படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com