'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வந்த எடம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளியாக இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com