'நானி 30' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும் படக்குழு..!

நானியின் 30-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'நானி 30' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும் படக்குழு..!
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்த நிலையில் நானியின் 30-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'நானி 30' படத்தின் டைட்டில் அறிவிப்பு கிளிம்ப்ஸ் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சவுரவ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com