'ராயன்' படம் பார்க்க திரையரங்கம் சென்ற படக்குழு

'ராயன்' படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டு வருகின்றனர்.
The film crew went to the theater to watch the movie 'Raayan'
Published on

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இந்தநிலையில், இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு ஆரம்பமானநிலையில், ரசிகர்கள் பலரும் படத்தை பார்க்க திரையரங்குகளில் திரண்டு வருகின்றனர். அதன்படி, ராயன் படக்குழுவும் படத்தை பார்க்க திரையரங்கம் வந்துள்ளது.

தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட படக்குழுவினர் திரையரங்கள் வந்து படம் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com