படமாகும் சரித்திர கதை... வேலு நாச்சியாராக நடிக்கும் புதுமுக நடிகை

‘மருது ஸ்கொயர்' என்ற சரித்திர கதையில் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுக நடிகை ஆயிஷா தேர்வாகி உள்ளார்.
படமாகும் சரித்திர கதை... வேலு நாச்சியாராக நடிக்கும் புதுமுக நடிகை
Published on

புகழ்பெற்ற சரித்திர கால மருது சகோதரர்கள் வாழ்க்கை 'மருது ஸ்கொயர்' என்று பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் பெரிய மருது, சின்ன மருதுவின் தலைவியாக விளங்கியவரும் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனையுமான வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுக நடிகை ஆயிஷா தேர்வாகி உள்ளார்.

இவர் 2019-ல் சென்னை அழகி பட்டம் வென்றவர். வேலுநாச்சியாராக நடிக்க ஸ்டண்ட் மாஸ்டர்கள் தவசிராஜ், மிராக்கல் மைக்கேல் ஆகியோரிடம் சண்டை பயிற்சி பெற்றுள்ளார். வாள் சண்டை, சிலம்பாட்டம், குதிரையேற்றம் பயிற்சிகளும் எடுத்துள்ளார்.

இந்த படத்தில் பெரிய மருதுவாக ஜே.எம்.பஷீர் நடிக்கிறார். சின்ன மருது வேடத்துக்கு பிரபல நடிகரிடம் பேசி வருகிறார்கள். இதர நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது. மருது ஸ்கொயர் படத்தை ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் டைரக்டு செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com