நீண்ட இடைவெளிக்குப்பின் படம் தயாரிக்கிறது, லிங்குசாமி நிறுவனம்

நீண்ட இடைவெளிக்குப்பின் லிங்குசாமி நிறுவனம் படம் தயாரிக்க உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப்பின் படம் தயாரிக்கிறது, லிங்குசாமி நிறுவனம்
Published on

டைரக்டர் லிங்குசாமி மற்றும் அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் பட நிறுவனம், திருப்பதி பிரதர்ஸ். பையா, அஞ்சான், வழக்கு எண் 18/9, கும்கி, மஞ்சப்பை, தீபாவளி, ரஜினி முருகன், உத்தம வில்லன் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், இது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், மீண்டும் படம் தயாரிக்கிறது. படத்துக்கு, நான்தான் சிவா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக அர்சிதா ஷெட்டி நடித்துள்ளார். ரேணிகுண்டா, 18 வயசு, கருப்பன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.பன்னீர்செல்வம் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

ஒரு இளைஞன் அவனுடைய வாழ்க்கையில் எதிர்பாராத வகையில், 2 பேரை சந்திக்கிறான். அந்த 2 பேரும் அவனுடைய வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதில் இருந்து இளைஞன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே படத்தின் கதை. இதில் காதலும் இருக்கிறது. சண்டை காட்சிகளும் இருக்கின்றன.

திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் படம் வளர்ந்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. அடுத்தகட்ட வேலைகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு டைரக்டர் பன்னீர்செல்வம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com