

படம் சீறும் புலி பிரபாகரன் வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். வெங்கடேஷ் குமார் ஜி டைரக்டு செய்கிறார். பிரபாகரனின் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர், அரிகரன். பின்னர், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயர் சூட்டப்பட்டது. அனைவராலும் அவர், தம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.