படமாகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதை

அவள் அப்படித்தான் என்ற பெயரில் மீண்டும் சில்க் சுமிதா வாழ்க்கை படமாகிறது.
படமாகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதை
Published on

வண்டி சக்கரம் படம் மூலம் 1979-ல் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 450 படங்களில் நடித்தவர் சில்க் சுமிதா. கவர்ச்சியான நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்தார். 1996-ல் அவர் மரணம் அடைந்தார். சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே டர்டி பிக்சர் என்ற படம் வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் அவள் அப்படித்தான் என்ற பெயரில் மீண்டும் சில்க் சுமிதா வாழ்க்கை படமாகிறது. கே.எஸ்.மணிகண்டன் இயக்குகிறார். இந்த படத்தில் சில்க் சுமிதா வேடத்துக்கு தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் தேர்வாகி உள்ளதாகவும், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் நேற்று வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறும்போது, சில்க் சுமிதா கதாபாத்திரத்துக்கு அனுசுயா பரத்வாஜ் தேர்வானதாக வெளியான தகவல் உண்மையல்ல. பொருத்தமான நடிகையை தேடி வருகிறோம். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. அவர் நடித்தால் மகிழ்ச்சிதான். பொங்கலுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com