உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் ‘மானிடன்’ திரைப்படம்

இப்படத்தின் மூலம் தினேஷ் சந்திரா கதாநாயகனாகவும், சினேகா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர்.
உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் ‘மானிடன்’ திரைப்படம்
Published on: 

சென்னை,

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படம் குறித்த முக்கியமான தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘மானிடன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘மானிடன்’ திரைப்படம்

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு ‘மானிடன்’ என்ற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் தினேஷ் சந்திரா கதாநாயகனாகவும், சினேகா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் சேரன் ராஜ், வேல்முருகன், ஜேம்ஸ், கண்ணபிரான், பாஸ்கர் லட்சுமி, ராகவன், மீசை ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செந்தில் கே.வீரய்யா இயக்கம்

பல திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய செந்தில் கே.வீரய்யா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சுரேஷ் ரங்கா ஒளிப்பதிவு செய்துள்ளார். சவுந்தர்யன் இசையமைத்துள்ளார்.

காதலும் போதைப்பொருள் விற்பனையும்

ஊருக்குள் போலீசார் வரக்கூடாது என்றும், ஊர் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும் நினைக்கும் பெரியவர் ஒருவரின் மகனும், அதே ஊரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து மக்களைச் சீரழிக்கும் நபரின் மகளும் காதலிக்கின்றனர். இவர்களது காதல் வெற்றி பெற்றதா? போதைப்பொருள் விற்பனையால் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் நிம்மதி அடைந்தார்களா? என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் திரைக்கு வருகிறது

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படம் குறித்த முக்கியமான தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘மானிடன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com