'பராசக்தி' திரைப்படம் இன்று வெளியாகிறது: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு


பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகிறது: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
x

இப்படம் தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. காலை 9 மணிக்கு பராசக்தி வெளியாக உள்ளது.

, 25 மாற்றங்களுடன் ’பராசக்தி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A 16+ சான்றிதழ் அளித்துள்ளது. அதன்படி, ’தீ பரவட்டும்’ என்ற காட்சி ’நீதி பரவட்டும்’ எனவும், ‘ஹிந்தி அரக்கி’ என்பதற்கு பதிலாக ‘அரக்கி’ எனவும், 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வசனம், ’என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், டிக்கெட் விற்பனை உடனடியாக தொடங்கியது. விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பராசக்தி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story