ஜெயராம், ஊர்வசி நடிக்கும் “பரிமளா & கோ” படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்

‘பரிமளா & கோ’ படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயராம், ஊர்வசி நடிக்கும் “பரிமளா & கோ” படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்
Published on

சென்னை,

‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், "வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா" என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.

இவர் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின், டீசர், டிரெய்லர் மற்றும் புரோமோ வீடியோ ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், “பரிமளா & கோ” படத்திற்கு தணிக்கை வாரியம் "யு/ஏ" சான்றிதழை வழங்கியுள்ளது. 13 வயதிற்கு மேற்பட்டோர் இந்த படத்தை தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com