விஜய், அசின் நடித்த `சிவகாசி' திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ்

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு, ‘சிவகாசி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
விஜய், அசின் நடித்த `சிவகாசி' திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ்
Published on

சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் 'ரீ-ரிலீஸ்' கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கில்லி, படையப்பா, மங்கத்தா, சச்சின், மற்றும் 3 போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்துள்ளன.

இந்த நிலையில், இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான சிவகாசி திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் அசின், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு, ‘சிவகாசி’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் உற்சாகமும் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com