'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு...!

'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு...!
Published on

சென்னை,

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பொதுமக்கள் இந்த படத்தை ஆர்வமாக திரையரங்குகளுக்கு வந்து கண்டு களித்தனர்.

இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com