'டிஎன் 2026' படம் அரசியல் அவலத்தை எடுத்துரைக்கிறது - சீமான்

இன்றைய காலகட்டத்தில் நடக்கிற அரசியல் சிக்கல்களை, அவலங்களை நேர்த்தியாக இயக்குனர் உமாபாதி ராமையா கொடுத்து இருக்கிறார்.
'டிஎன் 2026' படம் அரசியல் அவலத்தை எடுத்துரைக்கிறது - சீமான்
Published on

சென்னை,

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்ராஜ் நடித்துள்ள ‘டிஎன் 2026’ திரைப்படம் கடந்த 10ந் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல், நகைச்சுவை கதைக்களத்தில் வெளியான இந்த படம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், டிஎன் 2026 படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , இப்படம் குறித்து கூறியிருப்பதாவது, நாட்டில் நடக்கிற அரசியல் சூழல்களை, அவலங்களை குறைகளை அரசின் நிர்வாக சீர்கேடுகளை எடுத்துரைக்கும் படைப்புகள் தற்போது சுத்தமாக குறைந்துவிட்டது. அமைதிப்படை படம் எடுக்கும் போது எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்தோம் என்பது எங்களுக்குதான் தெரியும்.

இன்றைய காலகட்டத்தில் நடக்கிற அரசியல் சிக்கல்களை, அவலங்களை நேர்த்தியாக எல்லோரும் ரசிக்கும்படி யார் மனதையும் புண்படாதபடி, யாரையும் வலிந்து, திணிந்து தாக்க வேண்டும் என்று நோக்கம் இல்லாது அதன் காலப்போக்கில் கதை ஓட்டத்திலேயே மிக நகைச்சுவையோடு வருடி, இந்த அவலத்தை மக்களுக்கு சொல்கிற விதத்தில் மிகச்சிறப்பாக திரைக்கதையாக இயக்குனர் உமாபாதி ராமையா கொடுத்து இருக்கிறார்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com