'சின்ன சின்ன ஆசை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்திரன்ஸ் நடித்துள்ள 'சின்ன சின்ன ஆசை' படத்தினை அறிமுக இயக்குநரான வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ளார்.
'சின்ன சின்ன ஆசை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

சென்னை,

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுளில் ஒருவர் இந்திரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு 'கனகராஜ்யம்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குநரான வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் 'சின்ன சின்ன ஆசை' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க வாரனாசியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். பாபுஜி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்கனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com