வைரலாகும் ''கருப்பு'' படத்தின் பர்ஸ்ட் லுக்

நாளை ''கருப்பு'' படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
வைரலாகும் ''கருப்பு'' படத்தின் பர்ஸ்ட் லுக்
Published on

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ''கருப்பு'' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ''கருப்பு'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாளை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் வெளியாக இருக்கும்நிலையில், சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. இது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com