பெண்களே இல்லாத படமான 'மனிதர்கள்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் திரில்லர் பாணியில் 'மனிதர்கள்' படம் உருவாகியுள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மனிதர்கள்'. இந்த படத்தை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
யதார்த்த பாணியில் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இதில் பெண் காதபாத்திரமே கிடையாது. இப்படம் ஒரு இரவில் 5 நண்பர்கள் சிக்கிக் கொண்டு அவர்கள் சந்திக்கும் பயத்தையும் பதட்டத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிலேஸ் எல் மேத்யூ இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






