டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த படம் பான் இந்தியா அளவில் வருகிற ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியாக உள்ளது.
டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், தமிழில் அபியும் அனுவும்' என்ற படத்தில் நடித்துள்ளார். மாரி-2' படத்தில் வில்லனாக மிரட்டினார்.

தற்போது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பள்ளிச்சட்டம்பி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் டொவினோ தாமஸின் பிறந்தநாளையொட்டி, பள்ளிச்சட்டம்பி' படத்தின் பர்ஸ்ட் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டொவினோ தாமஸ் கூறும்போது, இந்த படம் 1950-60 காலகட்டத்தில் நடக்கும் கதை. பொதுவாக பீரியட் படங்களில் நடிப்பது என்றாலே எனக்கு பெருமை தான். அந்த காலகட்டத்தை உணர்த்தும் இந்த வகை படங்களில் நடிப்பு சரியாக அமையும் பட்சத்தில், ரசிகர்கள் நெஞ்சில் இன்னும் நாம் அழுத்தமாக பதிவோம்', என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com