வனிதா விஜயகுமார் நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தை தயாரித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து 'தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி' என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கிடையில், இவர் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமார் அவரே இயக்கி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அறிமுக டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை வனிதாவின் மகளான ஜோவிகா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com