"நேசிப்பாயா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் "நேசிப்பாயா" படம் தயாராகி வருகிறது.
"நேசிப்பாயா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Published on

சென்னை,

2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமீதா, ரகுமான், பிரபு, ஆதித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்தப்படத்திற்கு 'நேசிப்பாயா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் "நேசிப்பாயா" படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது அந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com