'பரமன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

விவசாயிகளின் பிரச்சினையை சொல்லும் 'பரமன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
Published on

சென்னை,

முண்டாசுப்பட்டி', 'பரியேறும் பெருமாள்' 'ஜெய்பீம்' உட்பட பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி, கதையின் நாயகனாக நடிக்கும் படம், 'பரமன்'. பழ கருப்பையா வில்லனாக நடிக்க, ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார்.

ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை இதயநிலவன் எழுதியுள்ளார். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தமீம் அன்சாரி இசை அமைத்துள்ளார். மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த 'கால்ஸ்' படத்தை இயக்கிய சபரிஸ், இன்பினிட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது, "நான் இயக்கிய கால்ஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம், பரமன் என்கிற விவசாயி ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லுகிறது. சமூகத்துக்குத் தேவையான கதை. விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை எந்த மிகைப்படுத்தலும் இன்றி சொல்லி இருக்கிறேன். பழ.கருப்பையா வில்லனாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடந்துள்ளது" என்றார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, சீமான் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர். இயக்குநர் சீமான், இப்படத்தின் டிரைலரையும் பார்த்துவிட்டு, இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது எனக் கூறி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் 'பரமன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கொண்டாட்டம் கும்மாளம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. படத்தின் பாடலை வேல்முருகன் பாடியுள்ளார்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com