விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் "ஜன நாயகன்" பாடல்... அனிருத் பதிவு வைரல்

விஜயின் பிறந்தநாளை ஒட்டி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிடுகிறது.
விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் "ஜன நாயகன்" பாடல்... அனிருத் பதிவு வைரல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜேடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியேல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய் பிறந்தநாளை ஒட்டி நள்ளிரவு 12 மணிக்கு 'ஜன நாயகன்' படத்தின் பாடல் வெளியாக உள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com