அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள “வித் லவ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தினை மதன் இயக்கியுள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள “வித் லவ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
Published on

சென்னை,

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

வித் லவ் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தின் டைட்டில் டீசரை ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார். இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வித் லவ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான அய்யோ காதலே பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com