சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் 'கங்குவா' படத்தின் முதல் பாடல் - படக்குழு அறிவிப்பு

'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் 'கங்குவா' படத்தின் முதல் பாடல் - படக்குழு அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 49-வது பிறந்தநாளை வருகிற 23-ம் தேதி கொண்டாட உள்ளார். இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'பயர் சாங்' (Fire Song) என்ற பாடல் வருகிற 23-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com