சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'சாகுந்தலம்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மல்லிகா' என்ற பாடல் வெளியாகி உள்ளது. கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை ரம்யா பெஹரா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com