சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் முதல் பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் முதல் பாடல் வெளியானது
Published on

சென்னை,

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

பிம்பிலிக்கி பிலாப்பி என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com