சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'கருடன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

'கருடன்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'கருடன்' படத்தின் முதல் பாடல் வெளியானது
Published on

சென்னை,

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கருடன்'. இந்த படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, 'பஞ்சவர்ண கிளியே' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com