'தி கோட்': பேனர் வைப்பது தொடர்பாக கோர்ட்டு போட்ட உத்தரவு - ரசிகர்கள் மகிழ்ச்சி


The Goat Movie Banners: Court Madurai Bench order
x
தினத்தந்தி 4 Sep 2024 10:28 AM GMT (Updated: 4 Sep 2024 12:23 PM GMT)

திரையரங்குகளின் முன் இப்படத்தின் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜ்ய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை திரையரங்குகளில் தி கோட் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், திரையரங்குகளின் முன் இப்படத்தின் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, தேனி பெரியகுளத்தில் உள்ள திரையரங்குகளின் முன் 'தி கோட்' பட பேனர்கள், ஸ்பீக்கர்கள் வைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நகராட்சி நிர்வாகத்தை அணுகி பேனர் வைப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story