'தி கோட்' படம் - தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய கேரள பெண் ரசிகர்கள்...

கேரளாவில் 'தி கோட்' படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கே வெளியாகி உள்ளது.
'தி கோட்' படம் - தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய கேரள பெண் ரசிகர்கள்...
Published on

கேரளா,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் கேமியே கதாப்பாத்திரத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் ஏஐ தோற்றத்தை படக்குழுவினர் உபயேகித்திருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், கேரள மாநிலத்தில் அதிகாலை 4 மணிக்கு 'தி கோட்' திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்த மாநிலத்தின் தம்பானூர் பகுதியில் உள்ள நியூ திரையரங்கில் திரையிடப்படும் இரண்டாவது காட்சிக்காக, மொத்த டிக்கெட்டையும் நடிகர் விஜய்யின் பெண் ரசிகர் மன்றம் வாங்கி மொத்த திரையரங்கத்தையும் மிரள வைத்துள்ளது. இந்த பெண் ரசிகர் மன்றம் தொடங்கி 9 வருடங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com