'தி கோட்': சினேகா இல்லை...விஜய்க்கு மனைவியாக நடிக்க இருந்தது இவர்தான்

'தி கோட்' படத்தில் விஜய்க்கு மனைவியாக சினேகா நடித்திருந்தார்.
'The Goat': Not Sneha...She was supposed to play Vijay's wife
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்தது. தற்போது வரை இப்படம் ரூ.315 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதில், அப்பாவாக நடித்த விஜய்க்கு மனைவியாக சினேகா நடித்திருந்தார். படத்தைபோல சினேகாவும் நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்நிலையில், சினேகாவிற்கு முன்பு இந்த பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் நயன்தாராவைதான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், இயக்குனர் வெங்கட் பிரபு இதனை வெளிப்படுத்தினார். மேலும், தி கோட் வெளியான பிறகு நயன்தாரா இப்படத்தை பார்த்ததாகவும், தன்னை அழைத்து சினேகா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், அந்த பாத்திரத்திற்கு அவர் சரியான தேர்வு என்றும் நயன்தாரா கூறியதாக வெங்கட் பிரபு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com