83 வயதில் 29 வயது காதலியால் தந்தையாகும் பிரபல ஹாலிவுட் நடிகர்...!

அல் பசினோ 29 வயதாகும் நூர் அல்பல்லா என்பவரை காதலித்து வருகிறார். நூர் அல்பல்லா தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்
83 வயதில் 29 வயது காதலியால் தந்தையாகும் பிரபல ஹாலிவுட் நடிகர்...!
Published on

தி காட் பாதர் படம் புகழ் ஹாலிவுட் நடிகர் அல் பசினோ.83 வயதாகும் அல்பசினோ தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அல்பசினோவுக்கு தன் முன்னாள் காதலியான நடிப்பு பயிற்சியாளர் ஜான் டாரண்ட் மூலம் ஜூலி மேரி (33) என்கிற மகள் இருக்கிறார். மேலும் இன்னொரு முன்னாள் காதலியான நடிகை பெவர்லி டி ஆஞ்சலோ மூலம் ஆண்டன் ஜேம்ஸ் , ஒலிவியா ரோஸ் (22) என்கிற இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள்.ஆனால் அல் பசினோ திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் அல் பசினோ 29 வயதாகும் நூர் அல்பல்லா என்பவரை காதலித்து வருகிறார். நூர் அல்பல்லா தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்.

விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ள அல் பசினோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் காதலுக்கு மட்டும் அல்ல தந்தையாவதற்கும் வயது முக்கியமில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நூர் அல்பல்லாவை காதலித்து வருகிறாராம் அல் பசினோ. இருவரும் ஜோடியாக சாப்பிட சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதை பார்த்தவர்களோ அல் பசினோவும், நூர் அல்பல்லாவும் காதலிப்பதாக பேசத் துவங்கினார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட நேரத்தில் தான் அல் பசினோ, நூர் அல்பல்லா இடையே காதல் ஏற்பட்டதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நூர் அல்பல்லா முன்னதாக பிரபல பாடகரான மைக் ஜாக்கரை காதலித்தார். மேலும் பெரும் பணக்காரரான நிக்கோலஸ் பெர்க்ரூன்னுடன் டேட்டிங் செய்திருந்தார்.

தி காட் பாதர் படத்தில் அல் பசினோவுடன் சேர்ந்து நடித்த ராபர்ட் டி நீரோவின் காதலி டிபனி சென் கடந்த மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 79 வயதாகும் ராபர்ட் டி நீரோவுக்கு இது 7வது குழந்தையாகும். அந்த குழந்தைக்கு ஜியா வெர்ஜினியா சென் டி நீரோ என பெயர் வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com