முதல் நாளில் வசூல் சாதனை... அயலான், கேப்டன் மில்லரை துவம்சம் செய்த 'குண்டூர் காரம்'...!

நேற்று வெளியான 'குண்டூர் காரம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதல் நாளில் வசூல் சாதனை... அயலான், கேப்டன் மில்லரை துவம்சம் செய்த 'குண்டூர் காரம்'...!
Published on

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் 'குண்டூர் காரம்' திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. ஆந்திராவில் தமிழ் படங்களான அயலான், கேப்டன் மில்லர், படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு போட்டியாக தெலுங்கில் ஹனு-மான் படம் மட்டுமே வெளியானது.

இந்த படத்தை 'அலா வைகுந்தபுரம்லூ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி இருந்தார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பேமிலி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் செண்ட்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மகேஷ் பாபுவின் படங்களில் முதல் நாளில் அதிக வசூலித்த படம் என்ற சாதனையை இந்த படம் படைத்துள்ளது. மேலும் முதல் நாளில் அதிகம் வசூலித்த பான் இந்தியா அல்லாத படம் என்ற சாதனையையும் இந்த படம் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான படங்களில் உலகளவில் கேப்டன் மில்லர் ரூ.15 கோடியும், அயலான் ரூ.7.8 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் 'குண்டூர் காரம்' திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com