'ஸ்டார் வார்ஸ்' படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனருக்கு ரூ.60 ஆயிரம் கோடி சொத்து

'ஸ்டார் வார்ஸ்' படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனருக்கு ரூ.60 ஆயிரம் கோடி சொத்து
Published on

உலகிலேயே பணக்கார சினிமா டைரக்டர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனோ அல்லது ஜுராசிக் பார்க் போன்ற படங்களை எடுத்த புகழ்பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கோ அல்ல.

அந்த நம்பர் ஒன் கோடீஸ்வர டைரக்டர் ஜார்ஜ் லூகாஸ். இவர் 'டிஎச்எக்ஸ் 1138' என்ற படத்தை இயக்கி ஹாலிவுட்டில் அறிமுகமானார். அப்போது சாதாரண பொருளாதார நிலையிலேயே இருந்த ஜார்ஜ் லூகாசை பெரும் கோடீஸ்வரராக மாற்றியது அவர் இயக்கிய ஸ்டார் வார்ஸ் படங்கள்தான்.

வேற்று கிரகத்தில் வாழும் ஜந்துக்கள், லேசர் கத்தி, பறக்கும் தட்டுகள், அந்தரத்தில் பறக்கும் பைக்குகள் என்று அந்த படங்களில் இவர் காட்சிப்படுத்திய விஷயங்கள் உலக ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. இதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டி பெரும் பணக்காரராக உருமாறினார்.

தற்போது 75 வயதாகும் ஜார்ஜ் லூகாஸுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் இருப்பதாக மதிப்படப்பட்டு உள்ளது. ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் ஆகியோர் இவரைவிட பல மடங்கு குறைவாகவே சொத்துகள் வைத்து இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com