10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் 'இருமுகன்' பட கூட்டணி

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் மே மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் 'இருமுகன்' பட கூட்டணி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘இருமுகன்’. இயக்குனர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த இப்படம் அப்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இருமுகன்’ படக்குழு மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் மே மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com