ஜெயில் திரைப்படம் 9-ந்தேதி வெளியாகும் - படக்குழு

ஜெயில் திரைப்படம் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
ஜெயில் திரைப்படம் 9-ந்தேதி வெளியாகும் - படக்குழு
Published on

சென்னை,

வெயில், அங்காடி தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ஜெயில்'. இந்த படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். நந்தன் ராம், 'பசங்க' பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வருகிற 9-ந்தேதி இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு ஜெயில்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனால் ஜெயில் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டதாகவும் தடைகள் முழுமையாக நீங்கி திரையரங்குகளில் ஜெயில் வெளியாகும் எனவும் டைரக்டர் வசந்தபாலன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது திரைப்படம் திட்டமிட்டபடி, வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com