'ரெட்ட தல' படத்திலிருந்து "கண்ணம்மா" வீடியோ பாடல் வெளியீடு

அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது.
'ரெட்ட தல' படத்திலிருந்து "கண்ணம்மா" வீடியோ பாடல் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ரெட்ட தல படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வருகிற 25 ந் தேதி வெளியாக உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ரெட்ட தல படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com