’கருப்பு' திரைப்படத்தின் டைட்டில் கார்டில் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி கார்டு போட்ட படக்குழு

‘கருப்பு’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
’கருப்பு' திரைப்படத்தின் டைட்டில் கார்டில் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி கார்டு போட்ட படக்குழு
Published on

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே, ‘கருப்பு’ திரைப்படம் மே 14ம் தேதி (நேற்று) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதி நெருக்கடி மற்றும் பைனாஸ் சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு ‘கருப்பு’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் தொடக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய்-க்கு ‘சிறப்பு நன்றி’ (Special Thanks Card) தெரிவிக்கும் கார்டு திரையிடப்பட்டது.

இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சூர்யாவும் விஜய்-யும் இணைந்து நடித்த திரையுலகின் ஆரம்பகாலத் திரைப்படமான 'நேருக்கு நேர்' படத்தில் இருவரும் தோன்றும் சில முக்கியமான காட்சிகள் அந்த நன்றி அட்டையில் இடம்பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திரையுலகில் நீண்ட கால நண்பர்களாகத் திகழும் இவர்கள், ஒருவர் அரசியலிலும் மற்றொருவர் நடிப்பிலும் உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த நெகிழ்ச்சியான நன்றியறிவிப்பு இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'கருப்பு' படத்தின் கதைக்களத்தோடு முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்ட இந்த நன்றி, அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் ஒரு ஆரோக்கியமான நட்புறவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com