'தி கேரளா ஸ்டோரி 2' படத்தை தடை செய்ய வேண்டும்- பினராயி விஜயன் எதிர்ப்பு

'தி கேரளா ஸ்டோரி 2' படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
'தி கேரளா ஸ்டோரி 2' படத்தை தடை செய்ய வேண்டும்- பினராயி விஜயன் எதிர்ப்பு
Published on

இயக்குனர் சுதீப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி 2 தேசிய விருதுகளை வென்ற படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படத்தில் அதா சர்மா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இயக்குனர் சுதீப்தோ சென் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, 'தி கேரளா ஸ்டோரி 2 ' என்ற தலைப்பில் அதன் 2-ம் பாகம் உருவாகி இருக்கிறது. இதனை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இதில் உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா, அதிதி பாட்டியா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 27ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், 'தி கேரளா ஸ்டோரி 2' படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது,“தி கேரளா ஸ்டோரி - 2' சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல், முதல் பாகம் கேரள அரசுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பி மதச்சார்பின்மையை கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது, பரஸ்பர  சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களை, கட்டாய மத மாற்றத்திற்கு உதாரணமாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com