பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' டீசர் - எப்ஐஆர் பதிவு செய்ய கேரள டிஜிபி உத்தரவு

பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கேரள டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' டீசர் - எப்ஐஆர் பதிவு செய்ய கேரள டிஜிபி உத்தரவு
Published on

திருவனந்தபுரம்,

சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் குத்துப்பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை அடா சர்மா. 'சார்லி சாப்ளின் 2' படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா நடித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் டீசர் கடந்த 3-ந்தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா, தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்துள்ளதாகவும், கேரளாவை தவறாகச் சித்தரிப்பதாகவும் தெரிவித்து இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழுவில் புகார் செய்யப்பட்டது.

மேலும், இப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹைடெக் செல் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற கருப்பொருள் படத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கேரளா டிஜிபி அனில்காந்த திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com