"வெனஸ்டே சீசன் 2" வெப் சீரிஸின் கடைசி 4 எபிசோடுகள் இன்று வெளியாகிறது

'வெனஸ்டே சீசன் 2' வெப் சீரிஸின் மீதமுள்ள 4 எபிசோடுகள் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின்றன.
"வெனஸ்டே சீசன் 2" வெப் சீரிஸின் கடைசி 4 எபிசோடுகள் இன்று வெளியாகிறது
Published on

சென்னை,

'வெனஸ்டே' வெப் தொடரின் மூலம் உலகளாவிய புகழை பெற்றவர் ஜென்னா ஒர்டேகா. தற்போது இவர் நடித்துள்ள 'வெனஸ்டே சீசன் 2' நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் 'வெனஸ்டே'. இதனை பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார். மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது. தற்போது இதன் 2-வது சீசன் உருவாகி இருக்கிறது. இதில், வெனஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா, எனிடாக எம்மா மியர்ஸ், பியான்காவாக ஜாய் சண்டே, யூஜினாக மூசா மொஸ்டாபா, அஜாக்ஸாக ஜார்ஜி பார்மர், டைலராக ஹண்டர் டூஹான் , மோர்டிசியா ஆடம்ஸாக கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ், கோமஸ் ஆடம்ஸாக லூயிஸ் குஸ்மான், பக்ஸ்லி ஆடம்ஸாக ஐசக் ஒர்டோனெஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இவர்கள் மட்டுமில்லாமல், சில புதிய முகங்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த 2வது சீசனும் 8 எபிசோடுகளை பெற்றுள்ளது. அதில் முதல் 4 எபிசோடுகள் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து மீதமுள்ள 4 எபிசோடுகள் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com