தலைவர் நிரந்தரம் நெல்சா... வைரலாகும் அனிருத் டுவீட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தலைவர் நிரந்தரம் நெல்சா... வைரலாகும் அனிருத் டுவீட்
Published on

சென்னை,

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க திரைப்பிரபலங்கள் பலரும் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.

இந்த நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் அவர், "தலைவர் நிரந்தரம் நெல்சா' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com