கொரோனா உணர்த்திய பாடம் பணம், சொத்துக்கள் மகிழ்ச்சியை தராது -நடிகை ராஷி கன்னா

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.
கொரோனா உணர்த்திய பாடம் பணம், சொத்துக்கள் மகிழ்ச்சியை தராது -நடிகை ராஷி கன்னா
Published on

உண்மையான மகிழ்ச்சி எது என்பதை உணர்ந்து கொள்ளும் நேரம் இது. பணம், சொத்துக்கள்தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கும் என்று இதுவரை நினைத்து இருந்தேன். இப்போதுள்ள கொரோனா நிலையில் அவை மகிழ்ச்சியை தராது என்று உனர்ந்துள்ளேன். போட்டி உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஓய்வு இல்லாமல் தூங்க முடியாமல் குடும்பத்தினருடன் இருக்க முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தார்கள். பணம் சம்பாதிப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது என்ற பிரமையிலும் இருந்தோம். சுயநலத்தோடு இயற்கை கொடுத்தவற்றையெல்லாம் துவம்சம் செய்து விட்டோம். இப்போது நாம் உயிரோடு இருப்பது கேள்விக்குறியாகும் நிலைமைக்கு வந்து விட்டோம். கொரோனாவை இயற்கை கொடுத்த ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இனிமேலாவது நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான ஆனந்தம் செல்வத்தில் இல்லை. ஆரோக்கியம்தான் மனிதனுக்கு மிக பெரிய செல்வம். மானசீகமான அமைதியோடு வாழ வேண்டும். மகிழ்ச்சியாக வாழ்வதுதான் விலை மதிக்க முடியாத சொத்து. ஆனந்தத்தையும் அன்பையும் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டு வாழ்வதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை இவ்வாறு ராஷி கன்னா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com