ஆலூ பராத்தாவால் பறிபோன உயிர்... இளம் நடிகையின் சடலம் மீட்பு

இரவு உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் பிரபல இளம் நடிகை மாமா வீட்டில் தற்கொலை செய்து உள்ளார்.
ஆலூ பராத்தாவால் பறிபோன உயிர்... இளம் நடிகையின் சடலம் மீட்பு
Published on

பூரி,

ஒடிசாவில் பிரபல நடிகை மற்றும் பாடகியாக இருந்தவர் ருச்சிஸ்மிதா குரு. இவரது வீடு போலாங்கீர் மாவட்டத்தில் தலபலிபடா பகுதியில் உள்ளது. இந்நிலையில், சுடாபடா பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து அவர் ஆல்பங்களில் நடித்து வந்து உள்ளார்.

இந்நிலையில், மாமா வீட்டின் அறை ஒன்றில் மின் விசிறியில் தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில், அவர் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதுபற்றி நடிகையின் தாயார் கூறும்போது, இரவு உணவுக்கு ஆலூ பராத்தா தயார் செய்வதில் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அவளை இரவு 8 மணிக்கு ஆலூ பராத்தா தயாரிக்கும்படி கூறினேன். ஆனால், அவளோ இரவு 10 மணிக்கு அதனை சமைக்கிறேன் என கூறினார்.

இதனால் சண்டை ஏற்பட்டது. அதன்பின் ருச்சிஸ்மிதா உயிரிழந்த நிலையில், கிடந்து உள்ளார் என கூறியுள்ளார். அவரது மகள் இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயன்று உள்ளார் என அவரது தாயார் போலீசிடம் கூறியுள்ளார்.

நடிகையின் மர்ம மரணத்திற்கு பின்னணியில் உள்ள காரணங்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எண்ணற்ற இசை ஆல்பத்தில் ருச்சிஸ்மிதா நடித்து உள்ளார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com