நடிகை உயிரை பறித்த 3 பேரின் காதல் போட்டி; பட அதிபரை போலீஸ் தேடுகிறது

காதல் போட்டியில் நடிகை உயிரை பறித்த பட அதிபரை போலீஸ் தேடுகிறது.
நடிகை உயிரை பறித்த 3 பேரின் காதல் போட்டி; பட அதிபரை போலீஸ் தேடுகிறது
Published on

பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ராவணி. இவர் மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு ஸ்ராவணி வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரது காதலர் தேவராஜ் ரெட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரவாணியை தாக்கியதாக அவரது முன்னாள் காதலர் சாய்ரெட்டியும் கைதானார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தெலுங்கில் வெற்றி பெற்ற ஆர்எக்ஸ் 100 உள்பட சில படங்களை தயாரித்த அசோக் ரெட்டி என்பவர் ஸ்ராவணியுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை விசாரிக்க போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டார். போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறும்போது, ஸ்ராவணியும் சாய்கிருஷ்ணாவும் காதலித்து பிரிந்துள்ளனர். பிறகு தேவராஜை காதலித்துள்ளார். அசோக் ரெட்டி தயாரித்த படத்தில் ஸ்ராவணி நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த மூன்று பேருமே அவரை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி உள்ளனர். இதனாலேயே மனம் உடைந்து தற்கொலை செய்து இருக்கிறார். சாய் கிருஷ்ணா, அசோக் ரெட்டி ஆகியோரால் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக ஸ்ராவணி பேசிய ஆடியோ பதிவை கைப்பற்றி உள்ளோம். அசோக் ரெட்டியை தேடி வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com