அழவைக்கும் அளவுக்கு ரசிகர்களின் அன்பு இருக்கிறது - நடிகை தமன்னா

ரசிகர்கள் தான் பிரபலங்களின் பெரிய சொத்து என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக 'புருஷன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி படங்களையும் வரிசையாக கைவசம் வைத்திருக்கிறார்.

இதுதவிர தற்போது நகை விற்பனையகம் தொடங்கி தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் ரசிகர்கள் குறித்து தமன்னா தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறும்போது, "ரசிகர்கள் தான் பிரபலங்களின் பெரிய சொத்து. அந்தவகையில் ரசிகர்களை வெகுவாக பெற்றிருப்பது என் பாக்கியம்.

அதேவேளை என்னை பார்த்த உற்சாகத்தில் பலரும் அழுகிறார்கள். சிலர் என் உருவத்தை பச்சை குத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் அழுகை வருகிறது. என்னை அழவைக்கும் அளவுக்கு ரசிகர்களின் அன்பு இருப்பதை பார்க்கும்போது புல்லரிக்கிறது" என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com