இணையத்தில் வைரலாகும் 'தேவரா' படத்தின் மேக்கிங் வீடியோ

கொரட்டலா சிவா இயக்கிய தேவரா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
இணையத்தில் வைரலாகும் 'தேவரா' படத்தின் மேக்கிங் வீடியோ
Published on

சென்னை,

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

ஜூனியர் என்டிஆரின் 30-வது படமான 'தேவரா பாகம்-1' கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.172 கோடி வசூல் செய்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 8-ந் தேதி ஓ.டி.டி வெளியாகி, அதிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இப்படத்தில் நான்கு படகுகளில் கடலின் நடுவே சண்டையிடும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த காட்சி எப்படி உருவாக்கப்பட்டது என்பதை காட்டும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com