இணையத்தில் வைரலாகும் 'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ

நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
இணையத்தில் வைரலாகும் 'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ
Published on

சென்னை,

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 43 நொடிகள் ஓடும் இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com