

இந்தப் படத்தை `பச்சை என்கிற காத்து', `மெர்லின்', `எட்டுத்திக்கும் பற' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான கீரா டைரக்டு செய்துள்ளார். இதில் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர்., ஐஸ்வர்யாதத்தா, யோகிபாபு, சென்ராயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி கீரா கூறும்போது, ``நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞனும் ஜெயின் சமூகத்து பெண்ணும் நட்பாக பழகு கிறார்கள். அந்த பெண் மீது இளைஞனுக்கு காதல் வருகிறது. ஆனால் அந்த பெண்ணோ சாமியாராக விரும்புகிறாள். இதை அறிந்த நரிக்குறவ இளைஞன் அந்த பெண்ணைக் கடத்தி நடுக்கடலுக்குள் கொண்டு செல்கிறான். அங்கு நடக்கும் சம்பவங்கள் மீதிகதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அந்தமான் கடல் பகுதியில் நடந்தபோது ஐஸ்வர்யா தத்தா படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். கடலில் குதித்து காப்பாற்றினோம்'' என்றார். இசை: ஶ்ரீகாந்த்தேவா, ஒளிப்பதிவு: லெனின்பாலாஜி.