நான்கு நாட்களில் லாபம் கொடுத்த மாநாடு திரைப்படம்

மாநாடு திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் 4 நாட்களில் லாபம் அடைந்துள்ளதாக படத்தின் டைரக்டர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்களில் லாபம் கொடுத்த மாநாடு திரைப்படம்
Published on

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'.

டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் கடந்த நவம்பர் 25-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த திரைப்படம் நடிகர் சிம்புவிற்கு சிறந்த 'கம் பேக்' (Come Back) படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கு படம் 4 நாட்களில் லாபம் ஈட்டித் தந்துள்ளதாக படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நான்கு நாட்களில் அனைத்து தமிழக விநியோகஸ்தர்களும் லாபம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அன்பிற்கு நன்றி மக்களே.

மேலும் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் எங்கள் விநியோகஸ்தர்கள் மூன்றே நாட்களில் லாபம் அடைந்துள்ளனர் என்று கேள்விப்பட்டேன். கடவுள் இரக்கமுள்ளவர்' என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com