நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: படப்பிடிப்பு நிறைவு

கோல்டன் ஸ்பாரோ' பாடல் இதுவரை யூடியூபில் 8.5 கோடி பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: படப்பிடிப்பு நிறைவு
Published on

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. மேலும் 'இட்லி கடை' எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்பாடல் இதுவரை யூடியூபில் 8.5 கோடி பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோல்டன் ஸ்பேரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் தனுஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

 இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இப்படத்தின் அடுத்த பாடலான காதல் பெயில் பாடல் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com